En Appa...






என் அப்பா !


நான் அவரை ஒரு பாதுகாப்பு வலை போல பயன்படுத்தினேன்
பாதுகாப்பற்ற என்  பாதையை அடைய,
என் பிஞ்சு விரல்கள் தடவப்பட்ட போது
நிதானமாகக் கவனித்தேன்
நான் உண்மையில் பயப்பட ஏதுமில்லை ... ...

அவருடன் தாம் தொடங்கியது
என் கருத்தியல் மற்றும் நம்பிக்கைகள்
அண்ணா சாலையில் 
இரவு நேர சென்னை சினிமா அரங்குகளிக்கான   
கடினமான சைக்கிள் பயணங்களில் ....

அவர் முரண்பாடுகள் நிறைந்தவராக இருந்தார்;
தெரியாத மற்றும் கேட்கப்படாத தர்க்கங்கள் ....
ஆச்சரியம் இல்லைவாழ்க்கை அவருக்கு கடினமாக இருந்தது
ஆனால் அவர் வாழ்க்கையில் தாம்  இருந்தார்.
 பெருமை, சுய குழப்பம் , சுய உள்ளடக்கிய
தாழ்வு மனப்பான்மை, எளிய பின்புலம்; அவரது  தந்தையின்அசாதாரண  மரணத்துடன்
ஓடிப்போன கல்வி படகுடன் 
அவர் வாழ்க்கையில் தாம்  இருந்தார்

நான் அவரை மதித்தேன் , முற்றும் நேசித்தேன் ,
கிரிக்கெட்டை அவர் அணிந்திருந்தார்
அதிகாலையில்  ஆஸ்திரேலிய ஒளிபரப்பு விருந்துக்கு.
என் கால்களை முறுக்கும் பொழுது கூட!
ஆனால் பல காரணங்களுக்காக வெறுத்தேன் ....
எங்கள் வீட்டின் ஊதியம் இல்லாமையின்
மிகச்சிறிய சண்டை மற்றும் தொடர்ந்த கலவரங்களில் .

அவர் என் நண்பர், என் ஆசான்
அவர் என் பாடப்பெறாத  பாட்டுடை தலைவன்
முடிந்தவரை புகைபிடித் தவர் ,
முடிவடையும் வரை கூட இருக்கலாம்,
ரம்மி விளையாட்டிற்கு  அடிமை!
எளிய மனிதர், ஒரு சிக்கலான வாழ்க்கை நடத்தினார்
பெரும்பாலும் வெள்ளை பொய்களால் .

அவர்  உடைந்து  பார்த்ததில்லை
சில நொடிகளுக்கு 
தன் நண்பர்களை, சுற்றங்களை இழந்த போது மட்டும் .
ஆனால் ஒரு எரிமலை போல வெடித்து,
ஒரு குழந்தை போல் குலுங்கிய இரவு
அவரது நேசகுமாரன் ரயில் நடையாய்
சென்னை சென்ட்ரல் --
லண்டன் விக்டோரியாவிற்க்கு சென்றபோது !

அதுதான் அவரை பார்த்த கடைசி  நாள்.
 சொல்ல தேவையில்லை,
அவர் என் உணர்வுடன் இருக்கிறார்
வாழ்க்கையின் உண்மையான , சில அருவருப்பான,
மற்றும் என் துணை  நனவில்
சாதாரண  வாழ்க்கை மற்றும் எளிமையான கருத்தியலில் நான்  முரண்படுகையில்,
எளிய வாழ்க்கை சிக்கலாகும் தருணங்களில் ... ..
அவர் என் உணர்வுடன் இருக்கிறார்.

நான் அவரை ஒரு பாதுகாப்பு வலை போல பயன்படுத்தினேன்
பாதுகாப்பற்ற என்  பாதையை அடைய,
என் பிஞ்சு விரல்கள் தடவப்பட்ட போது
நிதானமாகக் கவனித்தேன்
நான் உண்மையில் பயப்பட ஏதுமில்லை ... ...


அப்பாவின் 79 பிறந்த நாள் ....

Comments

Deva said…
Arumai, Appa, Anubavam.

Popular posts from this blog

Way of life- Kaniyan Poongundranaar, Purananooru, Tamil

My Dearest..........

NAYAGAN- 25 years.........